Wednesday, February 2, 2011

ஒரு நெல்லின் தவம்

விதைத்ததாகவே முளைத்தபோது
விம்மி வெடித்தேன்...
கதிரை அறுத்துக்கட்டியபோது
கனிந்து சிரித்தேன்...

காயவிட்டு காயப்படுத்தியபோது
கண்விழித்துக் காத்திருந்தேன்...
போரடித்துத் துவைக்கும்போது
போராடியெனை போற்றிவந்தேன்...

உரலிலிட்டு இடிக்கும்போது
ஊமைத்தவம் புரிந்துவந்தேன்...
பட்டைதீட்டி பாலிஷ் செய்தபோது
பொட்டிட்டுத் தயாரானேன்...

வெட்டிவிட்டு - நீ
வேண்டாம் இச்சோறென்று
உதறி யெழுந்தபோதுதான் -
உயிர் துறந்தேன்...

1 comment:

  1. வேண்டாம் இச்சோறென்று உதறி யெழுந்தபோதுதான் -
    உயிர் துறந்தேன் இவ்வவரிகள் மிகவும் பாதித்தது. ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டிய ஒன்று

    ReplyDelete